திங்கள், 7 மார்ச், 2011

ஏழை என்றால்



எதற்கும் உதவாத மகனை பெற்று விட்டோம் என்று வருந்திய பணக்காரர் தன் மகனுக்கு ஏழை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ள அவன் கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறான். அந்த மகனும் தன் தந்தையின் கிராமத்துக்கு ஒரு வாரம் தங்கிவிட்டு தன் வீட்டுக்கு வருகிறான். தந்தை மகனிடம் ஏழைகளை பற்றி தெரிந்துக் கொண்டாயா என்று கேட்டார்.

“நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது.அவர்களிடம் நான்கு உள்ளது.

நமக்கு குளியல் அறை உள்ளது. அவர்களுக்கு குளிப்பதற்கு பெரும் ஆற்று நீரே உள்ளது.

நமக்கு வாசல் கதவு வரை தான் சொந்தம். அவர்களுக்கு தொடுவானம் வரை சொந்தம்.

நாம் குறுகிய நிலத்தில் வாழ்கிறோம். அவர்கள் பெரும் நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.

நமக்கு மற்றவர் பணிவிடை செய்கிறார்கள். அவர்கள் மற்றவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு வலிமைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உணவுகளை நாம் வாங்குகிறோம். அவர்கள் உணவு பயிர்களை வளர்க்கிறார்கள்.

நம்மை சுற்றி நான்கு சுவர்கள். அவர்களை சுற்றி நண்பர்கள்.

நாம் இவ்வளவு பெரிய ஏழை என்ற உணர வைத்ததற்கு நன்றி.”
அந்த மகனின் தந்தை வாய்யடைத்து நின்றார்.