திங்கள், 7 மார்ச், 2011

நலம் தரும் வேம்பு



 வேம்பை ஒரு சதாரண மரமென்று எடைபோடமுடியாது. இது அதிகம் சக்தி வாய்ந்த ஒரு சஞ்சீவிமரம். இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் வேப்பமரம் என்றால் அது மிகையாகாது. விஞ்ஞானிகள் இதனை அதிசய மரம் என்று வியந்து கூறுகிறார்கள். வேம்பினை இந்துக்கள் நீண்டகாலமாக பயன்படுத்திவருகின்றனர். வலி, ஜீரம், தொற்றுநோய் போன்றவற்றிலிருந்து நிவாரணம்பெற வேம்பையே பயன்ப்டுத்தியுள்ளனர்.வேப்பங்குச்சியால் பல்லை சுத்தம்செய்கிறார்கள் வெப்பிலைச்சாற்றை தோல்நோய்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பசியைத்தூண்ட, பித்ததைக் குறைக்க, உடல் வலிமைபெற போன்ற உடற்கோளாறுகளை போக்க வேப்பிலையை கொதிக்க வைத்து கசாயமாக்கி தேனீரைப்போல் அருந்துகின்றனர்.

1959 ஆண்டு சூடான் நாட்டில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து  வேப்ப மரத்தைத் தவிர மற்ற ஏனைய மரங்களின் இலைகளை முற்றிலும் அழித்தது இதை அவதானித்த யேர்மனிய ஆராய்ச்சியாளர் ஹேயன் ரிச்சும் அவரது மாணவர்களும் இதை உலகிற்கு அறிவித்தார்கள் அதன்பின் விஞ்ஞானிகள் பலரின் கவனம் வேப்பமரத்தின் பக்கம் திரும்பியது ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் வேம்பைப் பற்றி நடாத்திய ஆய்வுகள் அனைத்தும் நம்பிக்கையான முடிவுகளையே தந்திருப்பதாக தெரிவிக்கிறனர்.

வேப்பமரத்தின் பயன்கள்
வேம்பு (mahogany) மஹோகனி என்ற தாவர வகையைச் சார்ந்தது. இது 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது . 2.5 மீட்டர் இதன் அதிகூடிய பருமனாகும். இது வளமற்ற நிலத்தில்கூட வேகமாக வளரும். பராமரிப்பு எதுவும் தேவையில்லை. இந்த மரம் எப்போதும் இலைகளோடே காணப்படுவதால் வருடம் முழுவதும் நிழல் தருகிறது. வேம்பை வீடுகளில் வளர்ப்பதனை இந்துக்கள் ஒரு வழக்கெனக் கொண்டிந்தாலும் அதற்கான விளக்கம் என்னவென்றால், வேம்பைச்சுற்றி ஆநவசந நோய் எதிர்ப்புசக்தி உள்ளதென்றும் காற்றானது தூய்மையடைகிறது என்றும் சொல்லப்படுகிறது. சித்த ஆயுர்வேத மருந்துகளில் வேம்பின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.(ஆயுர்வேததில் இதனை நிம்பா என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்) இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கு ஆபிரிக்காவில் நிழல் தருவதற்காகவும், சஹாராப்பாலைவனம் தெற்கு நோக்கிப் பரவுவதை தடுப்பதற்காகவும் வேம்பு அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. காடுகளை வளர்ப்பதற்காக மத்தியகிழக்கு நாடுகளிலும், மத்திய தென்னமெரிக்க நாடுகளிலும் வனக்காப்பாளர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.

வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் புச்சிக்கொல்லி மருந்துகள் இரசாயன மருந்துகளில் உள்ள டைல மேட்டைவிட அதிக சக்தி வாய்ந்தது இதனால் மனிதருக்கோ, விலங்குகளுக்கோ, இயற்கைக்கோ எந்தவகையிலும் பதிப்பும ஏற்படாது. வேப்பமர புச்சிகொல்லி மருந்துகளை தெளித்தால் அதன் மணம் உள்ளவரை வெட்டுக்கிளிகளோ அல்லது வேறு பூச்சிகளோ செடிகளை அழிக்காமலிருக்கின்றன. இரசாயன மருந்துகள் தெழிக்கப்பட்ட தாவரங்களை உணவாக உட்கொள்ளும்போது பல பின்விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்துகின்றது. ஆனால் வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் எந்தப் பின் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மிகக்குறைந்த விலையில் விவசாயிகளுக்கு இது கிடைக்கிறது.

அமெரிக்காவில் வாசிங்டன் தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட வேப்பமரம் பற்றிய ஆய்வுகள் பல திருப்புமுனைகளை உருவாக்கியுள்ளன.வேப்பமரத்திலிருந்து பெறக்கூடிய மருந்துகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.வேப்பமரம் அதிக எண்ணிக்கையில் வளர்வதனால் சுற்றுப்புற சூழல் பாதுகக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கண்
அமெரிக்காவின் கண் இப்போது வேப்பமரத்தின் மீது விழுந்திருக்கிறது. உலகில் வேப்பமரம் நிறைந்து காணப்படுகிற இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த வேப்பமரங்களின் காப்புரிமையையும் தனதாக்கிக்கொள்ள அமெரிக்கா முயன்று ஒரு தடவை தோற்றுப்போனது. ஆனால் அது இன்னும் வேறு பல வழிகளில் இதற்கான காய் நகர்த்தல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவின் இந்த ஆசை நிறைவேறுமானால் வேப்பங்கனிகூட எழைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும்.அமெரிக்கா இதில் இவ்வளவு அக்கறை காட்டுவதிலிருந்தே புரிந்துகொள்வோம் வேப்பமரத்தின் மகத்துவத்தை.


                                                                                                                                             பிரபா