திங்கள், 7 மார்ச், 2011

மழலையின் ஆசை



ஒரு நாள் தந்தை வீட்டுக்கு தன் வேலையை முடித்து வருகிறார். அவரிடம் மகன் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்கிறான்.

தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. “எதற்காக கேட்கிறாய்...?” என்றார்

“எனக்கு சொல்லுங்கள்... ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் என்று மீண்டும் தன் கேள்வியை” கேட்டான்.

தந்தை சன்று யோசித்து.... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானம் வரும்... இப்போ சொல் எதற்காக கேட்கிறாய்...?”

மகன் .. “சரி... எனக்கு 100 ரூபாய் பணம் வேண்டும்” என்றான்.

தந்தைக்கு கோபம் வந்தது. “உனக்கு எதுக்கு அவ்வளவு பணம்? காரணம் சொல்லாமல் தர முடியாது... போய் படு...” என்றார். மகன் அழுதுக் கொண்டே தூங்க சென்று விட்டான்.

சற்று நேரம் தந்தை யோசித்து, தூங்கிக் கொண்டு இருக்கும் மகனிடம் சென்றார். ஆனால் அவர் மகன் தூங்கவில்லை. தந்தை அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவனுக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்.

மகன் முன்பே 100 ரூபாய் வைத்திருந்தான். தந்தை கொடுத்த ரூபாயும் சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தான். தந்தை முன்பே 100 வைத்திருக்கும் போது “எதற்காக 100 பணம் கேட்டாய்?” என்றார்.

அதற்கு மகன்... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானத்தை தருகிறேன். நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர முடியுமா.... என்னுடன் உணவு அருந்த வேண்டும்” என்றான்.

தந்தை தன் தவறை உணர்ந்தார். தான் யாருக்காக இரவு பகலாக பணம் தேடுகிறமோ அவர்களுக்காக செலவிட நேரம் ஒதுக்குவதில்லை. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பணம் தேவை என்று தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவை கவனம் என்பதை மறந்துவிடுக்கிறார்கள்.