சனி, 5 மார்ச், 2011

ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் துதிகள் (தமிழ் விளக்கத்துடன்)



அம்பிகையை உள்ளன்போடு முழுமனதோடு பிரார்த்தனை செய்தால் தீராத பிரச்சினைகளே இல்லை. சௌந்தர்யலஹரி அம்பிகையின் முழு சக்தியையும், பிரதிபலிக்கக் கூடியது. அஷ்டமாசக்தியையும், அறுபத்துநான்கு கலைகளையும், பதினாறு பேறுகளையும், பிறவிப் பெரும் பயனையும் பெறலாம். முக்கியமான சில துதிகள் கீழே உள்ளது. பக்தர்கள் படித்து பயன்பெறலாம்.

1. பேச்சில் திக்கல் இருந்தால் நீங்க, பேச்சுத் திறமை அதிகரிக்க

த்வதீயம் ஸெளந்தர்யம் து ஹின கிரி, கன்யே துலயிதும்
கவீந்த்ரா : கல்பந்தே கதமபி விரிஞ்சி - ப்ரப்ருதய:
யதர்லோ கௌத்ஸுக்யா- தமரலலனா யாந்திமனஸா
தபோபிர் துஷ்ப்ரா பாமபி கிரிச - ஸாயுஜ்ய பத வீம்

(இமவத்புத்திரி! நினைத்தவுடன் கோடி கவிதைகளை மழையாகப் பொழியும் கவிஞர்களும், சரஸ்வதியை நாவில் தரித்திருக்கும் பாக்கியம் பெற்ற நான்முகனும் கூட உன் உழகுக்கு உதாரணம் தேடி கற்பனை செய்து தோல்வியுற்று விட்டார்கள். பரமசிவனின் கண்ணல்லாமல் வேறு கண்கள் உனது முழு அழகையும் கண்டதில்லை, உனது சந்தோஷமான நேரத்தில் என்னை நினைத்து அருள்புரிவாய் அம்மா!)

2. எத்துறையாயினும் புகழை விரும்புபவர்கள் சொல்லவேண்டிய ஸ்லோகம்

வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ - கும்பப்ரக்குதிபி:
ஸமாரப்தாம் முக்தா மணிபி-ரமலாம் ஹாரலதி காம்
குசாபோகோ பிம்பாதர - ருசிபி ரந்த: சபலிதகாம்
ப்ரதாப-வ்யாமிச்ராம் புரதமயிது: கீர்த்திமிவதே.

(அம்மா! யானையின் தலையில் தோன்றும் முத்து கர்ப்பூர வர்ணம் உள்ளது. கஜாசுரனை வதைத்த பின் அவன் தலையில் உள்ள முத்துக்களை எடுத்து தேவிக்கு மாலையாகப் பரிசளித்தார், ஈசன். அதில் தேவியின் உதட்டு சிவப்பு பிரதிபலித்து மாலை ஒரு பக்கம் பார்த்தால் சிவப்பாகவும், மறுபக்கம் வெள்ளையாகவும் ஜொலிக்கிறது. சிவப்பு வீரத்திற்கும், வெள்ளை புகழுக்கும் அடையாளம். அந்த இரண்டையும் தேவி நீ எனக்கு அளவில்லாமல் தர வேண்டும்.

3. பேய், பிசாசு அண்டாதிருக்க, தனி வழி செல்லும் போது ஜபிக்கவும்

நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரணமியாய பதயே:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி ரஸாலக்தகவதே
அஸுயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பசூனா-மீசான: ப்ரமதவன கங்கேலி-தரவே

(மருதாணியால் சிவந்த பாதங்களை உடைய பராசக்தி! மலட்டு அசோக மரமும் உன் பாதம் பட்டால் புஷ்பிக்கின்றது. உன் பட்டுப் பாதங்களை வருட பரமசிவன் ஆசைப்படுகிறார். அந்த பாதங்களால் பைசாசங்களை எட்டி உதைத்து என்னை ரட்சிப்பாயம்மா!)

4. பெண்களுக்கு விரைவில் விவாகம் நடக்க, மலட்டுத்தனம் நீங்க

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதிபி: பஞ்ச பிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்குதிபி:
த்ரயஸ் சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-திரிவலய
த்ரிரேகாபீ: ஸார்தம் தவ சரண கோணா: பரிணதா

(ஒன்பது முக்கோணங்களால் ஆன ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருப்பவளே! சுற்றி எட்டிதழ் கமலம் பதினாறிதழ் கமலம், மூன்று வட்டங்கள், மூன்று கோடுகள், நாற்பத்து நான்கு கோணங்களை உடைய ஸ்ரீ சக்கரத்தை என்னால் வர்ணிக்க இயலுமோ? நீ நினைத்தால் ஆகாத காரியமும் உண்டோ?)

5. இளமை அங்கப் பூரிப்புக் குறைவாக-எடுப்பான தோற்றப் பொலிவின்றி இருக்கும் பெண்கள் பொலிவான தோற்றம் பெற, கர்ப்பிணிகள் அழகான குழந்தைகளைப் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-திடகடித-கூர்ப்பாஸபிது ரௌ
கஷந் தௌதோர்-மூலே கனக-கலசாபௌரகலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ

(பரமசிவனுடைய பெருமைகளை நினைத்த மாத்திரத்தில் விம்மிதமுற்று மார்க் கச்சையைக் கிழித்து விடுமோ என்று எண்ணும்படி பூரித்து விளங்கும் பொற்குடங்களைப் போன்ற தனங்களின் பாரத்தினால் உனது மெல்லிய இடை ஒடிந்துவிடக் கூடாதென்று தான் அதில் மூன்று மடிப்புகள் உள்ளனவோ? அம்மா காத்யாயிணி! அந்த சௌந்தர்யத்தில் ஒரு துளியை என்னிடம் செலுத்தும்படி பணிந்து கேட்கின்றேன்.)