குட்டிகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டிகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மார்ச், 2011

அபராதம் ஒரு ரூபாய்


தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான். அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார். "இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்."இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்."அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்."அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

மழலையின் ஆசை



ஒரு நாள் தந்தை வீட்டுக்கு தன் வேலையை முடித்து வருகிறார். அவரிடம் மகன் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்கிறான்.

தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. “எதற்காக கேட்கிறாய்...?” என்றார்

“எனக்கு சொல்லுங்கள்... ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் என்று மீண்டும் தன் கேள்வியை” கேட்டான்.

தந்தை சன்று யோசித்து.... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானம் வரும்... இப்போ சொல் எதற்காக கேட்கிறாய்...?”

மகன் .. “சரி... எனக்கு 100 ரூபாய் பணம் வேண்டும்” என்றான்.

தந்தைக்கு கோபம் வந்தது. “உனக்கு எதுக்கு அவ்வளவு பணம்? காரணம் சொல்லாமல் தர முடியாது... போய் படு...” என்றார். மகன் அழுதுக் கொண்டே தூங்க சென்று விட்டான்.

சற்று நேரம் தந்தை யோசித்து, தூங்கிக் கொண்டு இருக்கும் மகனிடம் சென்றார். ஆனால் அவர் மகன் தூங்கவில்லை. தந்தை அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவனுக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்.

மகன் முன்பே 100 ரூபாய் வைத்திருந்தான். தந்தை கொடுத்த ரூபாயும் சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தான். தந்தை முன்பே 100 வைத்திருக்கும் போது “எதற்காக 100 பணம் கேட்டாய்?” என்றார்.

அதற்கு மகன்... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானத்தை தருகிறேன். நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர முடியுமா.... என்னுடன் உணவு அருந்த வேண்டும்” என்றான்.

தந்தை தன் தவறை உணர்ந்தார். தான் யாருக்காக இரவு பகலாக பணம் தேடுகிறமோ அவர்களுக்காக செலவிட நேரம் ஒதுக்குவதில்லை. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பணம் தேவை என்று தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவை கவனம் என்பதை மறந்துவிடுக்கிறார்கள்.

ஏழை என்றால்



எதற்கும் உதவாத மகனை பெற்று விட்டோம் என்று வருந்திய பணக்காரர் தன் மகனுக்கு ஏழை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ள அவன் கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறான். அந்த மகனும் தன் தந்தையின் கிராமத்துக்கு ஒரு வாரம் தங்கிவிட்டு தன் வீட்டுக்கு வருகிறான். தந்தை மகனிடம் ஏழைகளை பற்றி தெரிந்துக் கொண்டாயா என்று கேட்டார்.

“நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது.அவர்களிடம் நான்கு உள்ளது.

நமக்கு குளியல் அறை உள்ளது. அவர்களுக்கு குளிப்பதற்கு பெரும் ஆற்று நீரே உள்ளது.

நமக்கு வாசல் கதவு வரை தான் சொந்தம். அவர்களுக்கு தொடுவானம் வரை சொந்தம்.

நாம் குறுகிய நிலத்தில் வாழ்கிறோம். அவர்கள் பெரும் நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.

நமக்கு மற்றவர் பணிவிடை செய்கிறார்கள். அவர்கள் மற்றவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு வலிமைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உணவுகளை நாம் வாங்குகிறோம். அவர்கள் உணவு பயிர்களை வளர்க்கிறார்கள்.

நம்மை சுற்றி நான்கு சுவர்கள். அவர்களை சுற்றி நண்பர்கள்.

நாம் இவ்வளவு பெரிய ஏழை என்ற உணர வைத்ததற்கு நன்றி.”
அந்த மகனின் தந்தை வாய்யடைத்து நின்றார்.