என் எண்ணச் சிதறல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் எண்ணச் சிதறல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 மார்ச், 2011

தமிழக சட்டமன்றத்தேர்தல்

உலகக் கோப்பை கால்ப்பந்தாட்டம் தொடங்கினால் உலகத்தில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்டம்தான்.அதுபோல் வருகின்ற ஏப்ரல் மாததில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கான கொண்ட்டாட்டமும் ஆரம்பித்துவிட்டது. எனி இப்போது இருக்கிற கட்சியிலிருந்து என்னொரு கட்சிக்கு தவுவதும், சொந்தமாக புதுக்கட்சி தொடங்குவதும்,வாயில் நுழைவதையெல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி இறைப்பதும், எங்கேனும் தொகுதியில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தபின் யாரேனும் உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னால் வாக்குப் போட்ட மக்களை மறந்து கொள்கையை மறந்து தான் சார்ந்திருந்த கட்சிக்கு துரோகம் இளைத்துவிட்டு தாம் மட்டும் கொள்ளை லாபத்தை அனுபவிக்கப் போகிறார்கள். இது புதிய விடயமுமல்ல. வாக்குப்போடும் அந்த மக்களுக்கும் இந்த உண்மை தெரியும். அதைத் தெரிந்துகொண்டு அந்த மக்களால் என்னதான் செய்யமுடியும். இதுவரை பதவிக்கு வந்த அனைவரும் இதைத்தான் செய்தார்கள். இனிவரப் போகிறவர்களும் இதைத்தான் செய்யப்போகிறார்கள் . மக்களைப் பொறுத்தவரையில் ராமன் அண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன. அவர்களுக்கு அதனால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை
"முன்னம் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் நடத்தினார்கள் இப்போது அரசியல்வாதிகள் வியாபாரம் செய்கிறார்கள்"என்று அண்மையில் ஒரு கவிதையில் படித்த ஞாபகம்.
                                                                                                                   பிரபா

திங்கள், 7 மார்ச், 2011

மதம்



  இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு மகான் சாத்தானை வணங்கிக் கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் அவரிடம் வந்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனை வணங்காமல் சாத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அவர் நான் இறந்த பின்னர் எங்கே போகப்போகிறேனோ தெரியாது.ஒருவேளை நான் சாத்தானிடம் செல்ல நேர்ந்தால் அவனை நான் வணங்கினேன் என்பதற்காகவேனும் என்னை அவன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவான்.
  ஒருவேளை நீங்கள் கடவுளிடம் செல்ல நேர்ந்துவிட்டால் என்று உறவினர் கேட்டதற்கு,
  நாம் கடவுளைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர் அன்பானவர் நாம் அவர் மீது வெறுப்பைக் காட்டினாலும் எப்போதும் அவர் நம்மீது அன்பாகவே இருப்பார் என்றார் அந்த மகான்.

உண்மையில் மதங்கள் கடவுள் பற்றிக் கூறும் விளக்கங்களை கேட்கும்போதுகடவுள்மீது பக்தி ஏற்படுவதைவிட அதிகமாக பயம்தான் ஏற்படுகிறது. எந்த மதத்தவராய் இருந்தாலும் எங்கள் மதம்தான் உண்மையான கடவுளின் மதம்; மற்றவர்கள் சாத்தானின் வலையில் சிக்கியிருக்கிறார்கள்; நீங்கள் சாத்தனிடம் இருந்து விடுபட்டு விரைவில் எங்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்; இறைவன் ஆட்சியில் புதிய பரதீஸ் உருவாகப் போகிறது அங்கே நமது கடவுளின் விசுவாசிகளாய் இருப்பவர்கள் மட்டுமே வாழ்வார்கள்; மற்றவர்கள் சாத்தானோடு கொடிய நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றெல்லாம் மதநூல்களில் போதிக்கப் பட்டிருப்பதையும்கூட சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்டால் நமக்கும் கொஞ்சம் வயிற்றைக் கலக்குகிறது இல்லையா! மேற்கூறப்பட்ட குட்டிக்கதை இதைப் பற்றித்தான் விளக்குகிறது.

மதம் யானைக்குப் பிடித்தால் காடு அழியும்
அதுவே மனிதனுக்குப் பிடித்தால் நாடு அழியும்,
இதை உணராத வரையில் இந்த பூமியே நரகம்தான்!
                                                                                                   பிரபா

நலம் தரும் வேம்பு



 வேம்பை ஒரு சதாரண மரமென்று எடைபோடமுடியாது. இது அதிகம் சக்தி வாய்ந்த ஒரு சஞ்சீவிமரம். இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் வேப்பமரம் என்றால் அது மிகையாகாது. விஞ்ஞானிகள் இதனை அதிசய மரம் என்று வியந்து கூறுகிறார்கள். வேம்பினை இந்துக்கள் நீண்டகாலமாக பயன்படுத்திவருகின்றனர். வலி, ஜீரம், தொற்றுநோய் போன்றவற்றிலிருந்து நிவாரணம்பெற வேம்பையே பயன்ப்டுத்தியுள்ளனர்.வேப்பங்குச்சியால் பல்லை சுத்தம்செய்கிறார்கள் வெப்பிலைச்சாற்றை தோல்நோய்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பசியைத்தூண்ட, பித்ததைக் குறைக்க, உடல் வலிமைபெற போன்ற உடற்கோளாறுகளை போக்க வேப்பிலையை கொதிக்க வைத்து கசாயமாக்கி தேனீரைப்போல் அருந்துகின்றனர்.

1959 ஆண்டு சூடான் நாட்டில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து  வேப்ப மரத்தைத் தவிர மற்ற ஏனைய மரங்களின் இலைகளை முற்றிலும் அழித்தது இதை அவதானித்த யேர்மனிய ஆராய்ச்சியாளர் ஹேயன் ரிச்சும் அவரது மாணவர்களும் இதை உலகிற்கு அறிவித்தார்கள் அதன்பின் விஞ்ஞானிகள் பலரின் கவனம் வேப்பமரத்தின் பக்கம் திரும்பியது ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் வேம்பைப் பற்றி நடாத்திய ஆய்வுகள் அனைத்தும் நம்பிக்கையான முடிவுகளையே தந்திருப்பதாக தெரிவிக்கிறனர்.

வேப்பமரத்தின் பயன்கள்
வேம்பு (mahogany) மஹோகனி என்ற தாவர வகையைச் சார்ந்தது. இது 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது . 2.5 மீட்டர் இதன் அதிகூடிய பருமனாகும். இது வளமற்ற நிலத்தில்கூட வேகமாக வளரும். பராமரிப்பு எதுவும் தேவையில்லை. இந்த மரம் எப்போதும் இலைகளோடே காணப்படுவதால் வருடம் முழுவதும் நிழல் தருகிறது. வேம்பை வீடுகளில் வளர்ப்பதனை இந்துக்கள் ஒரு வழக்கெனக் கொண்டிந்தாலும் அதற்கான விளக்கம் என்னவென்றால், வேம்பைச்சுற்றி ஆநவசந நோய் எதிர்ப்புசக்தி உள்ளதென்றும் காற்றானது தூய்மையடைகிறது என்றும் சொல்லப்படுகிறது. சித்த ஆயுர்வேத மருந்துகளில் வேம்பின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.(ஆயுர்வேததில் இதனை நிம்பா என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்) இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கு ஆபிரிக்காவில் நிழல் தருவதற்காகவும், சஹாராப்பாலைவனம் தெற்கு நோக்கிப் பரவுவதை தடுப்பதற்காகவும் வேம்பு அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. காடுகளை வளர்ப்பதற்காக மத்தியகிழக்கு நாடுகளிலும், மத்திய தென்னமெரிக்க நாடுகளிலும் வனக்காப்பாளர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.

வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் புச்சிக்கொல்லி மருந்துகள் இரசாயன மருந்துகளில் உள்ள டைல மேட்டைவிட அதிக சக்தி வாய்ந்தது இதனால் மனிதருக்கோ, விலங்குகளுக்கோ, இயற்கைக்கோ எந்தவகையிலும் பதிப்பும ஏற்படாது. வேப்பமர புச்சிகொல்லி மருந்துகளை தெளித்தால் அதன் மணம் உள்ளவரை வெட்டுக்கிளிகளோ அல்லது வேறு பூச்சிகளோ செடிகளை அழிக்காமலிருக்கின்றன. இரசாயன மருந்துகள் தெழிக்கப்பட்ட தாவரங்களை உணவாக உட்கொள்ளும்போது பல பின்விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்துகின்றது. ஆனால் வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் எந்தப் பின் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மிகக்குறைந்த விலையில் விவசாயிகளுக்கு இது கிடைக்கிறது.

அமெரிக்காவில் வாசிங்டன் தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட வேப்பமரம் பற்றிய ஆய்வுகள் பல திருப்புமுனைகளை உருவாக்கியுள்ளன.வேப்பமரத்திலிருந்து பெறக்கூடிய மருந்துகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.வேப்பமரம் அதிக எண்ணிக்கையில் வளர்வதனால் சுற்றுப்புற சூழல் பாதுகக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கண்
அமெரிக்காவின் கண் இப்போது வேப்பமரத்தின் மீது விழுந்திருக்கிறது. உலகில் வேப்பமரம் நிறைந்து காணப்படுகிற இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த வேப்பமரங்களின் காப்புரிமையையும் தனதாக்கிக்கொள்ள அமெரிக்கா முயன்று ஒரு தடவை தோற்றுப்போனது. ஆனால் அது இன்னும் வேறு பல வழிகளில் இதற்கான காய் நகர்த்தல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவின் இந்த ஆசை நிறைவேறுமானால் வேப்பங்கனிகூட எழைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும்.அமெரிக்கா இதில் இவ்வளவு அக்கறை காட்டுவதிலிருந்தே புரிந்துகொள்வோம் வேப்பமரத்தின் மகத்துவத்தை.


                                                                                                                                             பிரபா

அன்பே சிவம்


    தமிழர்களின் வாழ்வியலோடுபின்னிப்பிணைந்திருப்பது சைவசமயமாகும். தமிழர்களின் கலை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்என்று அவர்களின் ஒவ்வொரு நகர்விலும் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவையாக இன்றுவரை இருந்துவருகிறது. சைவத்திலிருந்து மாறி வேறு மதங்களை தழுவி வாழுபவர்கள் மத்தியில்கூட இன்றும் சைவப்பழக்கவழக்கங்கள் மறாமல் இருக்கும் அளவிற்கு தமிழும் சைவமும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பதைக் காணலாம்.சைவம் அன்பைத்தான் முதன்மையாக போதிக்கிறது அன்பே சிவம் என்பது சைவர்களின் மூல மந்திரமாகும்.
இன்று சைவசமயத்தின்மீது அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மத்தியிலேயே சில அதிருப்திகள் எழுந்துள்ளன. சைவசமயத்தை சேர்ந்த இன்னும் பலர் வேறுமதங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்! பல காரணங்களைக் சொல்லலாம்.அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்களை இப்போது பார்ப்போம்.

*விளங்காத மொழியில் வழிபாடு செய்தல்.
*பூசை செய்பவர் யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்.

விளங்காத மொழியில்வழிபாடு
அதிகமான தமிழர்கள் சமஸ்கிருதம் தெரியாதவர்கள், ஆனால் சைவ ஆலயங்களில் ஏன் தமிழ் மொழியில் வழிபாடுகள் நடைபெறுவதில்லை என்று பெரும்பாலான தமிழர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. மந்திரங்கள் ஓசை வடிவில் அமைந்தவை அதனாலேயே சமஸ்கிருததில் வழிபாடு நடைபெறுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தமிழிலும் அவ்வகை மந்திரங்கள் உண்டு என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். எடுத்துக்காட்டு திருமூலர் எழுதிய திருமந்திரம்.

பூசை செய்பவரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்
உலகம் இருபத்தொராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.இன்றும் தமிழர்கள் மத்தியில் சாதிமுறை தொடர்வது பெரும்பாலான தமிழர்களுக்கு வேதனை அழிக்கின்ற ஒரு விடயமாக இருந்துவருகிறது. பூசகரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல் போன்ற சில முறைமைகளை தமிழாலயங்களில் இன்னும் கடைப்பிடிப்பதே இதற்கு காரணம் என்றும் அவர்களில் பலர் நம்புகின்றனர். ஏன் இன்னும் இந்த முறை தொடர்கிறது!  இவை நம்மிடம் இடையில் வந்து தொற்றிக்கொண்டவைதான். இன்றும் கதிர்காமம் போன்ற சில ஆலயங்களில் பிராமணர் அல்லாதோர் (வேட்டுவ இனத்தைச் சேர்ந்தவர்கள்) வருடத்தில் சில தினங்கள் பூசகராக இருந்து வழிபாடு செய்து வருகின்றமை யாவரும் அறிந்தவைதான். இது பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றுதான்.

      சைவசமயத்தின்மீது இளையோருக்கு ஈடுபாடு ஏற்படும் வகையிலும், அதன் மீது மற்ற மதத்தவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் வகையிலும் வழிபாட்டு முறைகளில் சீர்திருதங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளை களைவோம். புரியாத மொழியில் வழிபாடு, பூசை செய்பவர் சாதிமுறையில் தேர்ந்தெடுத்தல் இவை இரண்டும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய முக்கிய விடயங்களாகும். இன்று சில கோயில்களில் கவனத்தில் எடுக்கப் பட்டிருப்பத்தை அவதானிக்க முடிகிறது. ஆனால் இந்த மாற்றம் மிக வேகமாக செயற்படுத்தப்பட வேண்டும்

    இன்று உலகில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் மதங்களை எடுத்துப் பார்த்தால் காலத்திற்கு ஏற்ப நிகழ்ந்துவரும் மாற்றங்கள்தான்
இந்த வளர்ச்சிக்கு காரணமாகின்றது. சைவசமயத்தை பொறுத்தவரை புதிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.ஏற்கனவே நமது சமயத்தில் இதுவரை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கின்ற நல்ல விடயஙளை புகுத்துவதே போதுமானது. தமிழர்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு இனியும் காலம் தாழ்த்தாது செயற்பட வேண்டும்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

                                                                                                              பிரபா